பள்ளி மாணவ, மாணவியர் தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் . 2022-ம் ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டது.

மாதந்தோறும் ரூ.1,500

இந்த தேர்வில் பள்ளிக்‌ கல்வித்‌துறை மூலம் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை தரப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த நிலையில், 2024-2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான "தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு" 19.10.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இத்தேர்வில்‌ மொத்தம்‌ 2,35,025 மாணாக்கர்கள்‌ பங்குபெற்றனர்‌.

வெளியான தேர்வு முடிவுகள்

இத்தேர்வில்‌ 1500 மாணாக்கர்கள்‌ (750 அரசுப்பள்ளி மாணாக்கர்கள்‌ * 750 அரசுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து வகைப்பள்ளி மாணாக்கர்கள்‌) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌ வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வின்‌ முடிவுகள்‌ இன்று (டிச.20) வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வெழுதிய மாணாக்கர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தைக் க்ளிக் செய்யவும்.

அதில்‌ Results என்ற தலைப்பில்‌ சென்று பார்க்கவும்.

அதில் "தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வு முடிவுகள்‌" என்ற தலைப்பைத் தேர்வு செய்யவும். ‌

அல்லது https://apply1.tndge.org/ttse-result-2022 என்ற இணைப்பிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

அதில், மாணவர்கள் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்‌.

மேலும்‌ ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்‌டியல்‌, இணையதளத்திலே Other Examinations > தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வு முடிவுகள்‌ என்ற பக்கத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன.