காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையற்கூடங்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

காலை உணவுத் திட்டம்

தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டத்தில் முன்னேற்றம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் 4-ஆம் கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையற்கூடங்களை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், ஆய்வு செய்தார்.

அரசு நிதி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல்

பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியல் உள்ள அரசு பள்ளிகளில் 3-கட்டமாக 6300 மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு நிதி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளது.

புதிதாக பயனடையும் மாணவர்கள்

4-கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 99 அரசு நிதி பெற்று இயங்கும் பள்ளிகளில் பயிலும் 16.544 மாணவ-மாணவியர்கள், நகராட்சி பகுதியில் உள்ள 20 பள்ளிகளில் பயிலும் 3,400 மாணவ-மாணவியர்கள், பேரூராட்சி பகுதியில் 12 பள்ளிகளில் பயிலும் 1,652 மாணவ-மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயனடைய உள்ளனர்.

காலை உணவுத்திட்டத்தால் எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்

4-கட்டமாக காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு காலை உணவு தயார் செய்யும் இடங்களான காமராசர் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி பெண்கள் மணிமேகலை மேல்நிலைப் பள்ளி மற்றும் சிங்கராயர் காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்களில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது சமையல் கூடத்தில் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தவும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சுகாதாரமாகவும் உணவு தயார் செய்வதற்கு அறிவுத்தினார். பள்ளிகளுக்கு உணவு விநியோகம் செய்யும் HOT BOX உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் முழுவதும் 1,125 பள்ளிகளைச் சேர்ந்த 60,574 மாணவ, மாணவியர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்,