மாடு, குதிரை வண்டிப் பந்தயத்துக்கு திடீர் தடை! சாலை மறியலில் குதித்த உரிமையாளர்கள் கைது

1 month ago 2
ARTICLE AD

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இன்று சனிக்கிழமை நடைபெற இருந்த மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயத்திற்கு காவல்துறையினர் திடீரென அனுமதி மறுத்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வண்டி உரிமையாளர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் பந்தய ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவே குவிந்த வண்டிகள்

பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு கிராமத்தினர் சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பந்தயத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும், 30-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் வெள்ளிக்கிழமை இரவே பேராவூரணி பகுதிக்கு கொண்டு வரப்பட்டன.

மேலும், பந்தயத்திற்காக சுமார் ரூ.3 லட்சம் வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வண்டி உரிமையாளர்கள் மற்றும் பந்தய வீரர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

தொடங்கும் நேரத்தில் வந்த தடை

இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை பந்தயம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் திடீரென அனுமதி மறுத்ததாக ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

பந்தயத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வெளியூர்களில் இருந்து மாடு மற்றும் குதிரை வண்டிகள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

அண்ணா சிலை அருகே சாலை மறியல்

இதையடுத்து பேராவூரணி அண்ணா சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வண்டிப் பந்தயத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தொடர்ந்து பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி. அங்கிதா மற்றும் பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தனியார் திருமண மண்டபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று, மற்றொரு நாளில் வண்டிப் பந்தயத்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

‘நாட்டு மாடுகள், குதிரைகள் அழிந்துவிடும்’

இதுகுறித்து பந்தய ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ஏற்கனவே பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் எவ்வித காரணமும் தெரிவிக்காமல் பந்தயத்திற்கு தடை விதித்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிப் பந்தயங்கள் தொடர்ந்து தடை செய்யப்படுவதால் பாரம்பரியமாக வளர்க்கப்படும் நாட்டு மாடுகள் மற்றும் நாட்டு குதிரைகளின் பயன்பாடு பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், பந்தயத்திற்கு தடை விதிப்பதன் பின்னணியில் சிலர் ‘பீட்டா’ அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் வெளியாகவில்லை.

பேராவூரணியில் தொடரும் சர்ச்சை?

மேலும், தவெக ஆட்சி அமைந்த பிறகு கடந்த சில மாதங்களாக பேராவூரணி பகுதியில் மட்டும் தொடர்ந்து வண்டிப் பந்தயங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கடைசி நேரத்தில் பந்தயம் நிறுத்தப்பட்ட விவகாரம் பேராவூரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மற்றொரு நாளில் பந்தயம் நடத்துவது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

Read Entire Article