<p>தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் இடையே நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<h2><strong>புயலுக்கு முரசு எனும் பெயர் சூட்டத்திட்டம்</strong></h2>
<p>அந்தமான் அருகே புதிதாக புயல் உருவாகுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புயலுக்கு இந்தியா பரிந்துரைத்துள்ள முரசு எனும் பெயர் சூட்டப்பட உள்ளது.சமீபத்தில் வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் இப்புயல் அக்.28-ஆம் தேதியன்று ஆந்திரக்கடலோரப் பகுதியில் கரையை கடந்தது. இந்நிலையில் முரசு புயல் உருவாகி ஆந்திரப்பகுதிகளையொட்டிய மேற்கு,வடமேற்கு நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>