மாடலிங் சினிமா எல்லாம் வேண்டாம்.. நர்ஸிங் படிக்க வெளிநாடு கிளம்பிய பிக்பாஸ் அரோரா

2 months ago 8
ARTICLE AD

போலந்த் வார்சா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் விரைவில் வெளிநாடு புறப்பட இருப்பதாகவும் அரோரா யூடியூப் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கிளாமராக புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் அரோரா சின்க்ளேர். இவரை பலூன் அக்கா என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது வழக்கமாக இருந்தது. இப்படியான நிலையில் தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9 இல் அரோரா கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அவரை போட்டியாளராக தேர்வு செய்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக அரோரா மாறினார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் டைட்டிலை வென்றுவிடுவாரோ என்றுகூட பலரும் நினைத்தனர்.

மாடலிங்கை கைவிடும் அரோரா

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெரும்பாலான போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த புகழை வைத்து சினிமாவிற்குள் நுழையவே நினைப்பார்கள். குறிப்பாக அரோராவுக்கு கிடைத்த புகழுக்கு அவர் கதாநாயகியாகவே நடிப்பதற்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கு கிடைத்த புகழை தூக்கிப்போட்டு தனது கல்வியே முக்கியம் என முடிவு செய்துள்ளார் அரோரா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அரோரா " இந்த ஆண்டு அக்டோபரில் நான் படிப்பிற்காக வெளிநாடு கிளம்பிடுவேன். போலண்ட் நாட்டில் வார்சா பல்கலைகழகத்திற்கு விண்ணப்பித்திருக்கிறேன். சம்பளம் போட்டவுடன் கிளம்பிவிடுவேன். நான் பிக்பாஸில் சொன்னது போல் சத்தியமாக நான் மாடலிங் மற்றும் சினிமவை எல்லாம் கைவிடப்போகிறேன்.

துஷார் உடன் காதல் பற்றி அரோரா

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் அரோரா மற்றும் துஷார் ஆகிய இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். துஷார் மீது அரோரா வெளிப்படையாகவே ஆர்வம் காட்டி வந்தார். இது பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது. பிக்பாஸ் முடிந்தபின்னும் இருவரும் வெளியே சந்தித்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டனர். இதனால் துஷார் மற்றும் அரோராவை வைத்து சர்ச்சைக்குரிய விதமாக பலர் பதிவிட்டு வந்தனர். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அரோரா " எனக்கு துஷாரை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் இணைந்து இருந்தால் என்னால் அவரது வளர்ச்சி தடைபடும் என்று நான் பயப்படுகிறேன். என்னுடைய பதிவில் யாராவது என்ன கமெண்ட் செய்தாலும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் என்னுடன் சேர்ந்து இருக்கிறார் என்பதற்காகவே துஷார் பற்றி யாராவது தப்பாக பேசினால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் அவரைவிட்டு விலகி இருக்கவே முடிவு செய்திருக்கிறேன்' என்று அரோரா கூறினார்.

All the best for your Studies #AuroraSinclair ❤️❤️ She chose education over modelling/cinema ❤️#BiggBossTamil9 pic.twitter.com/ENkCgMEiKa
— M̶i̶s̶S̶ M̶i̶n̶D̶ 🐧 (@Anbudan_Missy) February 6, 2026

Read Entire Article