மஹிந்திரா தார் Vs ராக்ஸ்: ஆஃப் ரோடிங், குடும்பப் பயணம், மைலேஜ், விலை- எது சிறந்தது?

1 month ago 3
ARTICLE AD

இந்திய சாலைகளில் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற மஹிந்திரா தார் (Mahindra Thar), தனது 3-கதவுகள் கொண்ட மாடலை தார் ஓஜி (Thar OG) என்ற பெயரில் புதிய மெக்கானிக்கல் மற்றும் டிசைன் மாற்றங்களுடன் அப்டேட் செய்துள்ளது. இது 3 கதவு தார் OG மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் (Thar Roxx) இடையேயான வித்தியாசத்தை பெரிதும் குறைக்கிறது. ராக்ஸ் மாடலின் சிறப்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால், சிட்டி டிரைவிங்கிற்கு மிகவும் எளிதாகவும், சௌகரியமாகவும், சக்திவாய்ந்த காராகவும் இது மாறியுள்ளது.

வடிவமைப்பு மற்றும் டிரைவிங் அனுபவம்

புதிய தார் OG மாடலில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கிற்கு பதிலாக முதல்முறையாக எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், M Glyde 4G பிளாட்ஃபார்ம், வாட் லிங்கேஜ் உடன் கூடிய ரியர் பென்டாலிங்க் சஸ்பென்ஷன் மற்றும் FDD தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகர போக்குவரத்து நெரிசலில் காரை திருப்புவதும், பார்க்கிங் செய்வதும் எளிது. DRL-களுடன் கூடிய C-வடிவ LED ஹெட்லைட்கள், புதிய பம்பர்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், அதிக சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

இடவசதி மற்றும் குடும்பத்திற்கான தேர்வு (Thar Roxx)

அதிக கேபின் ஸ்பேஸ் மற்றும் குடும்பத்துடன் பயணிக்க தார் ராக்ஸ் சிறந்த தேர்வாகும். இது அளவில் பெரியது என்பதுடன் பின்பக்க பயணிகளுக்கு தனி கதவுகள், தாராளமான லெக்ரூம், பூட் ஸ்பேஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், பெரிய டூயல் ஸ்கிரீன் செட்டப், லெவல்-2 ADAS மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் என பல பிரீமியம் அம்சங்களை கொண்ட முழுமையான ஃபேமிலி எஸ்யூவியாக இது உள்ளது.

ஆஃப்-ரோடிங்கிற்கு எது சிறந்தது? (Thar OG):
காடுகள், மலைகள், சேற்றுப் பாதைகளில் ஆஃப்-ரோடிங் செய்ய தார் OG சிறந்தது. இதன் கச்சிதமான 3-கதவு அமைப்பு, குறுகிய வீல்பேஸ், சிறந்த அப்ரோச்/டிபார்ச்சர் கோணங்கள், புதிய எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபெரென்ஷியல் மற்றும் பிரத்யேக டெரெய்ன் மோட்கள் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்றவை.

விலை மற்றும் உங்கள் தேர்வு

ஆரம்ப விலை மற்றும் அம்சங்களை ஒப்பிடுகையில் தார் OG மாடல் சிறந்த 'வேல்யூ ஃபார் மணி' (Value for money) தேர்வாக உள்ளது. ஆனால் பெரிய அளவு மற்றும் ஹைடெக் அம்சங்களால் தார் ராக்ஸ் விலை சற்று அதிகம். இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் ஆஃப்-ரோடு பயணம் செய்ய தார் OG-யும்; அன்றாட அலுவலகப் பயணம், குடும்பப் பயணங்களுக்கு தார் ராக்ஸ் மாடலும் சரியான தேர்வாகும்.

Read Entire Article