மழை பெய்த நேரத்தில் அமைச்சர் மேற்கொண்ட அதிரடி திடீர் ஆய்வுக்கு வரவேற்பு

3 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு தாலுகாவில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் வினோத் ரவி திடீரென மழை பெய்ததால் ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்தது மக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையைத் தொடர்ந்து, அரசு விழாவை முடித்துவிட்டு நேரடியாக நெல் சேமிப்பு கிடங்குக்கு சென்று குடை பிடித்தபடியே அமைச்சர் வினோத்ரவி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் வினோத்ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர் அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

அந்த நேரத்தில், சமீபத்தில் நெல் சேமிப்பு கிடங்குகள் தொடர்பாக எழுந்த விவாதங்கள் மற்றும் மழைக்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரத்தநாடு அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குக்கு அமைச்சர் உடனடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மழை தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்த நிலையிலும், குடை பிடித்தபடியே சேமிப்பு கிடங்கு முழுவதும் சுற்றிப் பார்த்த அமைச்சர், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்பதை நேரில் பார்வையிட்டார்.

ஆய்வின் போது, நெல் மூட்டைகள் தார்ப்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளனவா, தரைத்தளத்திலிருந்து உரிய உயரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளனவா, மழைநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் வினோத்ரவி, "மழைக்காலம் என்பதால் எந்த நேரத்திலும் மழை பெய்யக்கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையுடன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சேமிப்பு கிடங்கில் அதிகாரி நிலையில் ஒருவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். வேறு அவசர பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், மாற்று அதிகாரியை சுழற்சி முறையில் நியமித்து விட்டே செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

மேலும், "விவசாயிகளின் உழைப்பின் பலனாக அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது. மழையால் ஒரு மூட்டைகூட சேதமடையாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்" என்றும் அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.

இந்த திடீர் ஆய்வின் போது, சேமிப்பு கிடங்கில் பணியாற்றி வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அமைச்சருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.

மழை நேரத்திலும் களத்திற்கே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சரின் இந்த நடவடிக்கை, விவசாயிகளின் விளைபொருட்களை பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இங்கு நெல்மூட்டைகள் சரிந்து விழுந்து தற்காலிக பெண் பணியாளர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article