மழை காலமா இது..? மயிலாடுதுறையை வெளுத்து வாங்கும் மழை...!

9 months ago 6
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 64.60 மில்லி மீட்டர் மழைமானது பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மார்ச் 1 -ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நெல்லையில் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?

3-ம் தேதி வரை மழை

காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மாா்ச் 1-ம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் மார்ச் 1 இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

TN Weather: சட்டென்று மாறுது வானிலை.. தமிழ்நாட்டில் தொடருதே மழை! கோடையில் குளுகுளு மூடில் மக்கள்!

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும் மார்ச் 1 -ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இந்தபகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அன்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்காலை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Obesity: ஸ்மார்ட்போன் பிசாசு, அதீத உடல் பருமன், இளைஞர்களிடயே ஏற்படுவது ஏன்? தவிர்க்க செய்ய வேண்டியவை என்ன?

மயிலாடுதுறை மாவட்ட மழை நிலவரம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் மிதமான மழையானது பதிவாகி வருகிறது. இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக அதிகாலையில் இருந்த பனியின் தாக்கம் மற்றும் பகல் பொழுதில் இருந்து வந்த வெப்பமும் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 10.77 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 1.60 மில்லி மீட்டர், மணல்மேடில் 5 மில்லி மீட்டர், கொள்ளிடம் 8.40 மில்லி மீட்டர், தரங்கம்பாடியில் 43 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் 6.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 43 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 1.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் இந்தாண்டு மழை மற்றும் தற்போது பெய்து வரும் மழையானது தொடர்ந்து தரங்கம்பாடியில் அதிகமழை பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Trump Zelensky: அழைத்து வந்து அசிங்கப்படுத்திய ட்ரம்ப், செய்வதறியாமல் கிளம்பிய ஜெலன்ஸ்கி: வீடியோ வைரல்

Read Entire Article