இன்ஸ்டாகிராம் பிரபலமான வாட்டர்மெலன் ஸ்டார் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். மாகபா ஆனந்த் , புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் தன்னை தாக்கியதாக திவாகர் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது யூடியுப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுக்க சென்றபோது தன்னை அங்கிருப்பவர்கள் சேர்ந்து அடிப்பதாக செட்டில் இருந்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கஜினி படத்தின் காட்சியில் நடித்து ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். வாட்டர்மெலன் காட்சியில் நடித்து பிரபலமானதால் தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என பட்டம் சூட்டிக்கொண்டார். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் போட்டியாளராக கலந்துகொண்ட வாட்டர்மெலன் ஸ்டார் பெண்களிடம் நடந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் விமர்சனத்திற்கு உள்ளானது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சர்ச்சை

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான மாகபா ஆனந்த் , போட்டியாளர் புகழ் மற்றும் கானா வினோத் தன்னை இரும்பு ராடால் தாக்கியதாக நஸ்ரெத் காவல் நிலையத்தில் புகாரளித்தார் திவாகர். இந்த புகாருக்கு விளக்கமளித்த மாகபா ஆனந்த் வாட்டர்மெலன் ஸ்டார் சக போட்டியாளரிடம் ஆபாசமாக பேசியதாக கூறினர். மேலும் திவாகர் தனது சாதி பெருமையை பேசியதாக கானா வினோத் கூறியிருந்தார்.

யூடியுப் சேனலில் தகராறு

தற்போது வாட்டர்மெலன் ஸ்டார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன்னை நேர்காணல் எடுக்க சொல்லி ப்ரோவோக் யூடியுப் சேனல் வரவழைத்து தன்னை தாக்குவதாக அவர் கூறியுள்ளார்.

போற இடத்தில் எல்லாம் தர்பூசணிய பொலந்து அனுப்புறானுங்க போல 🤧 pic.twitter.com/NIGHozGNoX

— P R A G A ™ (@Pragaoffl) April 16, 2026