மயிலம் முருகன் கோயிலில் மனமுருகி சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

4 months ago 5
ARTICLE AD

விழுப்புரம்: தமிழகத்தில் பருவமழையானது 45 நாட்களில் பெய்யும் போது 900 மி.மீட்டர் அளவிற்கு மழை பொழிவு இருந்தது. காலநிலை மாற்றத்தால் 30 நாட்களில் 950 மி.மிட்டர் அளவிற்கு மழைபொழிவு அதிகமாக இருப்பதால் அந்த மழை நீர் தேக்கி வைப்பதற்கு போதிய ஏரி குளங்கள், தூர்வாரப்படவிலை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உரிமை மீட்பு நடைபயணம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மயிலம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இன்று உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்கிறார். நடைபயணத்திற்கு முன்பாக அன்புமணி ராமதாஸ் மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

அப்போது அவரிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்.,  சிறுவதிலிருந்து மயிலம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிவதாகவும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 45 நாட்களுக்கு பருவமழை பெய்து 900 மி.மீட்டர் அளவிற்கு மழை பெய்கிறது. தற்போது காலநிலை மாற்றமடைந்து 30 நாட்களில் 950 மி.மிட்டர் அளவிற்கு மழைபொழிவு அதிகமாக இருக்கிறது அந்த மழை நீர் தேக்கி வைப்பதற்கு போதிய ஏரி குளங்கள், தூர்வாரப்படவிலை என்பதால் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே உரிமை மீட்பு நடைபயணம் செய்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு இல்லாத சூழல்

மேலும் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் காஷ்மீரில் பேசும் போது மக்களுக்கு அடிப்படை உரிமை என்ன என்பது தெரியாமல் உள்ளது. அந்த உரிமையை கொடுத்தாலும் அவர்களுக்கு என்ன என்று தெரியாது. அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கூறியிருந்தார். அதனை மக்களிடையே எடுத்த செல்லவே இந்த நடைபயணம் என ஸ்ரீமத் சிவஞான பால சுவாமியிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடுத்துரைத்தார்.

Read Entire Article