”மத்திய அரசின் துறையாக செயல்படும் தேர்தல் ஆணையம்...” மா.கம்யூ., பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

4 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தேர்தல் ஆணையம் மத்திய அரசின் துறையாகவே செயல்படுகிறது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் சில பிரிவு மக்களைச் சேர்க்கக்கூடாது என்பதைத் திட்டமிட்டு, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலளார் எம்.ஏ. பேபி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றம் என்பது அரசு மட்டுமல்ல, மக்களுக்கானது. எதிர்க்கட்சித் தலைவர் உள்பட அனைவரும் மக்களின் பிரதிநிதிகளே. இதை சர்வாதிகார மோடி அரசு ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் பிரச்னை குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், நரேந்திர மோடி, அமித்ஷா வந்த பிறகு இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மேலிலிருந்து கீழே உத்தரவிடும் அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் துறையாகவே செயல்படுகிறது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் சில பிரிவு மக்களைச் சேர்க்கக்கூடாது என்பதைத் திட்டமிட்டு, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முறைகேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவு பரிசீலனையில் இருப்பதாக ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த மாநிலத்திலுள்ள மகா கூட்டணி எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம். இந்தச் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஒரு புறம் பெயர்கள் நீக்கப்படும் நிலையில், மறுபுறம் சேர விரும்பும் நபர்களை தற்போது அமலில் இருக்கும் விதிகளை மீறி சேர்க்க வேண்டும் என வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கும், தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் முன்பு 6 மாதங்கள் ஒரு முகவரியில் இருப்பவர்களைச் சேர்க்கலாம் என்ற விதிமுறைகளை மீறி 2 நாட்கள் இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறொரு மாநில ஆட்களை தேர்தல் நடக்கும் மாநில வாக்காளர் பட்டியலில் இணைத்து, அம்மாநில தேர்தல் முடிவுகளைச் சீர்குலைப்பதற்குச் செய்வதாகத் தெரிகிறது.

இந்த நிலைமையில் அடுத்த ஆண்டு கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், இப்போதே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மத்திய அரசின் முகவர் போன்று ஆளுநர்கள் செயல்படுகின்றனர். இப்பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எதிர்கொள்கின்றன. இது, இந்திய அரசிலயமைப்பின் மீறியும், கூட்டாட்சிக்கு எதிராகவும் செயல்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி, கலாசாரம், தமிழர்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு சமக்ர சிக்ச திட்டத்தில் மத்திய அரசு ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க மறுக்கிறது. இதற்கு அதிமுகவும், தமிழ்நாட்டு பாஜகவும் என்ன பதில் அளித்துள்ளன. அதிமுகவும் - பாஜகவும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக அல்லாமல், திமுகவுக்கு துணையாக நிற்கின்றனர். தமிழ்நாட்டைப் போலவே கேரளத்திலும் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு ஆட்சியைத் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.;

பேட்டியின் போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி, மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read Entire Article