மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கரை ஒட்டவதா.! கூச்சமா இல்லையா.? அண்ணாமலை பதிலடி

1 week ago 3
ARTICLE AD

திமுக- பாஜக பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக சார்பாக களம் இறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜக முதலமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவினருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் தான் மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு கொண்டுவரப்படும் என பேசியதாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

மெட்ரோ ரயில் திட்டம்- மஹாராஷ்டிரா முதல்வர் வாக்குறுதி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,  மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.

வேளாண் பல்கலைக்கழகம் எங்கே.?

ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?  உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Read Entire Article