மதுரையில் புதிய சாதனை.. ரூ.213 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு வீரரின் பெயர்!

1 month ago 7
ARTICLE AD

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன். - முதல்வர் வெளியிட்ட தகவல்.

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம்

மதுரையில் நீண்ட நாள் கோரிக்கையான கோரிப்பாளையம் - செல்லூர் பகுதியை இணைக்கும் மேம்பாலம் 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகள் முடிந்திருக்க வேண்டும் தனியார் கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடுக்கப்பட்டதால் தாமதமாகி உள்ளது. தற்போது ஏழாவது முறையாக கோரிப்பாளையம் பணிகளை ஆய்வு செய்துள்ளேன்” என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

அந்த சிறப்பான பெயர் என்ன?

மேலும் “வைகை வடகரை சாலை நீண்ட நாள் கோரிக்கை இற்காக 168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கு சிறப்பான பேரை வைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இந்த பகுதி மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அந்த பெயரை முதல்வர் வைப்பார். விரகனூர் மேம்பாலத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் முன்னெடுப்பின்படி விபத்தை குறைப்பதற்காக நூறு இடங்களை கண்டறிக்கப்பட்டு விபத்துகளை குறைக்கப்பட்டு வருகிறோம். சுங்கச்சாவடி சாலைகள் ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது இல்லையென்றால் அரசு சார்பாகவும் செய்யப்பட்டு வருகிறது” என்றார். இந்நிலையில் பாலம் திறப்பு குறித்தும் - பாலத்தின் பெயர் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்

”நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”! தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன். ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article