அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் உலக தரத்தில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அமைத்துக் கொடுத்தார். முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அடுத்தடுத்து ஆறு நாட்கள் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள்.

அமைச்சர் பி.மூர்த்தி அறிக்கை

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் அடுத்தடுத்து ஆறு நாட்கள் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்ட செயலாளர் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அறிக்கையில் என்ன உள்ளது

எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விழாவை உலக அளவில் பெருமை சேர்க்கும் வகையில் அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் உலக தரத்தில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டி எப்போது

இந்த அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி வருகிற 27.01.2026ஆம் தேதி மதுரை கிழக்கு தொகுதி திமுக சார்பாகவும், அதே போன்று 29.01.2026 மதுரை மேற்கு தொகுதி திமுக சார்பாகவும், 31.01.2026 மதுரை மேலூர் தொகுதி திமுக சார்பாகவும், பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி சோழவந்தான் தொகுதி திமுக சார்பாகவும், 05ஆம் தேதி உசிலம்பட்டி தொகுதி திமுக சார்பாகவும், 9ஆம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதி திமுக என தொடர்ந்து ஆறு நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் ஜல்லிக்கட்டில் அந்தந்த தொகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. மேலும் விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அவற்றினை மடக்கிப் பிடிக்கும் காளையர்களுக்கும் சிறப்பு வாய்ந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதில் கழக நிர்வாகிகள், கழகத்தினர், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தமது அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.