பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. வரத்து குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகமாக உள்ளது. - எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தை

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு பல்வேறு இடங்கலில் இருந்து பூக்கள் வருகிறது. டன் கணக்கில் வரும் பூக்களும் விரைவாக விற்பனையாகிவிடும். குறிப்பாக மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கிடைக்கும் மல்லிகைப் பூ விற்கு அதிக மவுசு உண்டு. இதனால் மதுரை மல்லிகை சூடுவதற்கு மட்டுமில்லமால் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதற்கும், அதிகளவு ஏற்றமது செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று கார்த்திதை ஒன்றாம் தேதி பிறந்த சூழலில், இன்றும் பூக்களின் விலை அதே விலை விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்: (18.11.2025)

* மதுரை மல்லி கிலோ ரூ.800,

* பிச்சி கிலோ ரூ.500,

* முல்லை கிலோ ரூ.500,

* செவ்வந்தி கிலோ ரூ.180,

* சம்பங்கி கிலோ ரூ.40,

* செண்டு கிலோ மல்லி ரூ.30,

* கனகாம்பரம் (வரத்து இல்லை),

* ரோஸ் கிலோ ரூ.150,

* பட்டன் கிலோ ரோஸ் ரூ.180,

* பன்னீர் கிலோ ரோஸ் ரூ.200,

* கோழிக்கொண்டை கிலோ ரூ.100,

* அரளி கிலோ ரூ.150,

* மரிக்கொழுந்து (வரத்து இல்லை),

* தாமரை (ஒன்றுக்கு) ரூ.12 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது

பூக்கள் விற்பனை மிக சுமாராக உள்ளது.1.2டன் வரத்து உள்ளது. பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாகவே உள்ளது. வரத்து குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகமாக உள்ளது. என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்தார்.