மதுரையில் 106 வயது ஆலமரத்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் - இயற்கை ஆர்வலர்கள் நெகிழ்ச்சி!

4 months ago 4
ARTICLE AD

மதுரையில் நாட்டின் தேசிய மரமான ஆலமரத்திற்கு 106-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். ஆலமரத்தை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்று வாழ்த்து தெரிவித்த மாணாக்கர்கள் - இயற்கை ஆர்வலர்கள்.

நூறு ஆண்டுகளை கடந்து வரும் ஆலமரம்

மதுரை மாநகர் மீனாட்சிபுரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்தது. இவைகள் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பூங்கா அமைப்பு காரணமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்தும் இருந்து வருகிறது. இந்த ஆலமரம் ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக இருப்பதோடு, காக்கை, புறாக்கள், குயில்கள் ஆகிய பறவைகள் கூடுகள் கட்டிவசித்து வருகின்றது. மேலும் இந்த ஆலமரம் அந்த பகுதி மக்களின் நிழலோடு இளைப்பாறும் இடமாகவும், நினைவுகளை பகிரும் அடையாளமாகவும் இருந்து வருகிறது.

ஆலமரத்தின் 106 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்

இந்நிலையில் நூற்றாண்டை கடந்த நாட்டின் தேசிய மரமான ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாவனை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  இன்று மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 106 -வது பிறந்த நாள் விழா நீர்நிலைபாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர்  பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடியும் உறுதிமொழி ஏற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இயற்கை ஆர்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

இதனைத்தொடர்ந்து மனித வாழ்வில் மரங்களின் பயன்கள் குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் உணர்த்தும் வகையிலும், ஆலமரம் உள்ளிட்ட அனைத்து வகையான நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஓவியங்கள் வரைத்து மாணாக்கர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

பர்த்டே ஆலமரத்தின் முன்பாக செல்பி

106ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ள இந்த ஆலமரம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முயன்றபோது பல்வேறு போராட்டங்களை சந்தித்து இன்றளவும் அப்பகுதி மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவும், வாழ்வின் நினைவகளிலும் நீங்கா இடைத்தை பிடித்துள்ளதால் மனிதர்களுக்கு கொண்டாடப்படுவது போல வண்ண வண்ண விளக்குகள் கட்டப்பட்டும்,  ஒலிப்பெருக்கி மூலமாக பாடல் போடப்பட்டும் உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மரத்திற்கு பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதை பார்த்து, பர்த்டே ஆலமரத்தின் முன்பாக நின்றுகொண்டு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இயற்கை வள பாதுகாப்பு நாளில் இதுபோன்று தேசிய மரமான ஆலமரத்திற்கு பிறந்தநாள் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது, எனவும். இதுபோன்ற மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Read Entire Article