மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 11, 2025, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர்காலனி, கண்ண னேந்தல், பரசுராம்பட்டி, சூர் யாநகர், ஊமச்சிகுளம், கடச் சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்ட வுன், தபால் தந்திநகர், பாமா நகர், பம்பா நகர், பொறியாளர்நகர், குடிநீர் வாரிய காலனி, செட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலை நகர், மீனாட்சி நகர், இ.பி., காலனி.

இதேபோல், கோ.புதூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான: பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபாதிராய்ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்டிசி ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏஆர் குடியிருப்பு, நியூ டிஆர்ஓ காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு (இபி குவாட்ர்ஸ் முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசர்வ்லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர்பங்களா, ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு (ஐடிஐ பஸ் டாப் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை), டீன் குவார்டிஸ், காமராஜர் நகர் 1,2,3,4, ஹச்சகாண் ரோடு, கமலா முதல் மற்றும் இரண்டாவது தெரு, சித்ரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மஹால் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம் கண்மாய் மேல தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, ஆத்திகுளம், குறிஞ்சிநகர், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகர், பழனிச்சாமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.