அதிமுக விருப்பமனு

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம். டிச.15 முதல் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ், அமமுக கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன.

புதிய உச்சத்தில் வெள்ளி

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 கூடி ரூ.209க்கு விற்பனை.
வரலாறு காணாத வகையில் 1 கிலோ ரூ.2,09,000க்கு விற்பனை. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 கூடி, ரூ.96,400-க்கு விற்பனை.

இண்டிகோ விமானங்கள் ரத்து

சென்னையில் இன்று 10வது நாளாக 24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து. நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது.

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது கோவை செம்மொழி பூங்கா

கோவை காந்திபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு. காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றே கடைசி நாள்

மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை (SIR) அளிக்க இன்று கடைசி நாள். தமிழ்நாட்டில் இதுவரை 6.38 கோடி படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 70 லட்சம் வாக்காளர்களை நீக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்!

கேரள மாநிலத்தில் திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் 2ஆம் கட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது 3 மாநகராட்சிகள், 47 நகராட்சிகள், 77 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38,991 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்

கனடாவை சேர்ந்த ஆர்ட்டன் கேப்பிடல் என்ற நிறுவனம் வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக UAE முதலிடம். ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்பதன் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது. UAE பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு விசா இல்லாமல் பறக்கலாம். இந்தியாவுக்கு 67வது இடம்.

இன்று இரண்டாவது T20..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புது சண்டிஹார் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்திய ஆண்கள் அணி, புது சண்டிஹாரில் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுதான்

கிரிக்கெட் மட்டுமே எனது காதல்

“என் வாழ்வில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை. இந்திய அணியின் ஜெர்ஸியை அணியும்போது வேறு எந்த எண்ணமும் இருக்காது. பிரச்னைகளை ஒதுக்கிவிட்டு களத்தில் கவனம் செலுத்துவேன்” -ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட் துணை கேப்டன்

மெஸ்ஸிக்கு 70 அடி சிலை

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நாளை மறுநாள் (டிச.13) கொல்கத்தாவுக்கு வரவுள்ள நிலையில், அங்கு 70 அடி உயரத்திற்கு அவரது பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. லேக் டவுன் பகுதியில் உள்ள இச்சிலை, Sree Bhumi Sporting Club சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.