கடந்த ஆண்டு ரூபாய் 4.05 கோடியாக இருந்த உணவுக் கடைகள் வாடகை தற்போது 95.70 சதவீதம் உயர்ந்து ரூபாய் 7.92 கோடி ஆகியுள்ளது.

மதுரை ரயில்வே கோட்ட வருமானம் 1408.69 கோடி ஈட்டியுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டம், கடந்த 2025 - 26 நிதி ஆண்டில் மொத்த வருமானமாக ரூபாய் 1408.69 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டு வருமானமாக ரூபாய் 1245 கோடியை காட்டிலும் 13 சதவீதம் அதிகம். மதுரை கோட்டத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த வருமான இலக்கான ரூபாய் 1340 கோடியை காட்டிலும் 5 சதவீதம் அதிகம். மதுரை கோட்டத்தில் பயணிகள் பயணச் சீட்டு விற்பனை வருமானம் அதிகபட்சமாக ரூபாய் 886.32 கோடியை தொட்டு உள்ளது. இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த பயணிகள் வருமான இலக்கான ரூபாய் 863.90 கோடியை காட்டிலும் 3 சதவீதம் கூடுதல் ஆகும். கடந்த ஆண்டில் மதுரை கோட்டம் 4.89 கோடி பயணிகளை கையாண்டுள்ளது.

நிர்ணயித்த இலக்கான 4.62 கோடியை காட்டிலும் 6 சதவீதம் அதிகம்.

இது தெற்கு ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த இலக்கான 4.62 கோடியை காட்டிலும் 6 சதவீதம் அதிகம். அதேபோல சரக்கு போக்குவரத்து வருமானம் ரூபாய் 411 கோடியாக பதிவாகியுள்ளது. இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வரையறுத்த வருமான இலக்கான ரூபாய் 375.05 கோடியை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.149 மில்லியன் டன்னுக்கு அதிகமாக 3.572 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. முதன் முறையாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு மஞ்சள் பட்டாணி அனுப்பப்பட்டு அதன் மூலம் ரூபாய் 2.75 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதர பயணிகள் வருமானமான பார்சல், லக்கேஜ், நடைமேடை சீட்டு, பயண சீட்டு பரிசோதனை ஆகியவற்றின் வாயிலாக ரூபாய் 60.65 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

ரூபாய் 50.72 கோடி வருமானமும் கிடைத்துள்ளது.

பார்சல் போக்குவரத்து கணினி மயமாக்கப்பட்ட பிறகு எப்போதும் இல்லாத அளவாக தற்போது ரூபாய் 10.78 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 97 சதவீத ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை நடத்தப்பட்டு பயண சீட்டு இல்லாதோர் மற்றும் ரயில்வே சட்ட விதிகளை மீறியவர்களிடம் அபராதமாக ரூபாய் 12.73 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவு வருமானங்களான உணவு கடைகள் வாடகை, வாகன காப்பகங்கள், ஓய்வறைகள் பராமரிப்பு, விளம்பரங்கள், கழிவு பொருட்கள் விற்பனை ஆகியவற்றின் வாயிலாக ரூபாய் 50.72 கோடி வருமானமும் கிடைத்துள்ளது.

உணவுக் கடைகள் வாடகை

கடந்த ஆண்டு ரூபாய் 4.05 கோடியாக இருந்த உணவுக் கடைகள் வாடகை தற்போது 95.70 சதவீதம் உயர்ந்து ரூபாய் 7.92 கோடி ஆகியுள்ளது. விளம்பரங்கள் வாயிலாக ரூபாய் 8.58 கோடியும், வாகன காப்பக பராமரிப்பு மூலமாக ரூபாய் 7.45 கோடியும், தங்கும் அறைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட காத்திருக்கும் அறைகள், கழிப்பறைகள் பராமரிப்பு வாயிலாக ரூபாய் 1.79 கோடியும் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 23.60 கோடியாக இருந்த கழிவு பொருட்கள் விற்பனை வருமானம் 16 சதவீதம் அதிகரித்து ரூபாய் 23.60 கோடியாக உருவெடுத்துள்ளது.