ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஜவுளித்துறை சார்ந்த இலவசப் பயிற்சிகள்.. உடனே அப்ளே பண்ணுங்க !

1 hour ago 1
ARTICLE AD

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும்  தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

வழங்கப்படும் பயிற்சிகள்:

1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses)

2.  துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல்* (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses)   தகுதி மற்றும் நிபந்தனைகள்:   வகுப்பு:    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC / ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம்:  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள்இருக்க வேண்டும்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:  கால அளவு: 4 மாதங்கள் இடம் மற்றும் தங்குமிடம்: இப்பயிற்சி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி மற்றும் உணவுச் செலவினங்கள் முழுவதையும் தாட்கோ (TAHDCO) ஏற்கும்.

சான்றிதழ் & வேலைவாய்ப்பு: பயிற்சி நிறைவுற்றதும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தகுதியான நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் ரூ.25,000- முதல் ரூ.50,000- வரை ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியும் விருப்பமும் உள்ள விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com - என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read Entire Article