மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் திடீர் அனுமதி... காரணம் தெரியுமா?

1 month ago 2
ARTICLE AD

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் அனுமதி; சராசரி நாட்கள் போன்று வேகமாக தரிசனம் செய்யும் பக்தர்கள்.

Madurai Meenakshi Amman Temple Kumbabishekam 2026: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று நிறைவடைந்தது. தொடர்ந்து தற்போது பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செப்டம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் தற்போது பக்தர்கள கோயிலுக்குள் தெற்கு கோபுரம் வாயிலாகவும் மேற்கு கோபுரம் வாயிலாகவும் அனுமதிக்கப்பட்<wbr />டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாக கோவிலில் உள்ள 12 கோபுரங்கள் மற்றும் 2 தங்க விமானங்களுக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா, தமிழில் வேத மந்திரங்கள் ஓதி தேவாரம் திருவாசகம் மற்றும் தமிழ் மந்திரங்கள் வழியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்  மொபைல் போனை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாம் நாள் இன்று பக்தர்கள் வருகை  அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சராசரி நாட்கள் போன்று பக்தர்கள் வருகை இருந்து வருகிறது. வடமாநில பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். சௌகரியம் கருதி மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்  மொபைல் போனை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோயிலுக்குள் வீடியோ புகைப்படம் எடுக்காமல் போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்" என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எந்தவித கட்டண வழிபாடும் இல்லாத காரணத்தினால் நேரடியாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி தரிசனம் செய்ய ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் ஆவதாகவும் சொக்கரை தரிசனம் செய்ய 40 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் சாமி தரிசனம் செய்து வந்த பக்தர்கள் தெரிவித்தனர். நான்கு கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால் கூட்டம் இல்லாமல் சௌகரியமாகவும் வேகமாகவும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Read Entire Article