மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி: 8 பேர் கைது! மேலும் பலர் சிக்கலாம்? பரபரப்பு விசாரணை!

5 months ago 5
ARTICLE AD

ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டும். நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்தின் மூலமாக முடிவெடுக்கப்படும். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆணையாளரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறைகேடுகள்

சில மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து  முறைகேடுகளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்காக விரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை சட்டவிரோதமாக  பயன்படுத்தப்பட்டதும் தெரிவித்துள்ளது. 2,3,4 ஆகிய மண்டலங்களில் அதிகளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் காவல் துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள், குறித்து தீவிர விசாரணையை நடத்தியதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்

இதன் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் முறைகேடுகள் நடைபெற்ற மண்டல அலுவலகங்களில் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை மாநகராட்சி 3ஆவது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டன்ர். தொடர்ந்து உதவி ஆணையாளரின் உதவியாளர் கார்த்திகேயன், இடைத்தரர்களான உசேன், ராஜேஷ் ஆகிய 3  பேரை நேற்று முன் தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே கைதான 3 பேரையும் மாநகராட்சி பணியில் இருந்து பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறைகேடு வழக்கில் மொத்தம் 8 பேர் கைதான நிலையில், நடத்திய முதற்கட்ட விசாரணையில் மண்டல தலைவர்கள் வரிவிதிப்பு குழுவினர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் வற்புறுத்த காரணமாகவே முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் மதுரை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் சில மண்டல தலைவர்கள், சில மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

மொத்தம் 8 பேர் கைதானது எப்படி?

வரிக்குறைப்பு முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்தியுள்ள நிலையில் மேலும் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று காவல் துறையினர் சங்கிலித் தொடராக தீவிர விசாரணை நடத்தியது வரிக்குறைப்பு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக மாநகராட்சி அதிகாரி (ARO) செந்தில்குமரன்,  ஒய்வு பெற்ற  உதவி ஆணையர் ரெங்ராஜன், இடைத்தரகர் முகமது நூர் ஆகிய மூவரையும் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் மொத்தம் 8 பேர் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article