மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான தொடர்பான வழக்கு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு விசாரணை முறையாப நடைபெறவில்லை என்ற குற்றச்சாட் டை மனு தாரர் எழுப்பினால்,
இந்த வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி

மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் 2024-ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் பல மாதங்கள் தாமதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை மாநகராட்சியில் 2022 முதல் 2024 வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றுள்ளது. வரிக்குறைப்பு செய்துள்ளனர். இந்த முறைகேட்டால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த புகார் மனுவை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இதற்கு முன் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

குற்றப்பத்திரிக்கை

அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கில் மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு அனுமதி வழங்குவது குறித்து நடைமுறையில் உள்ளது என வாதிட்டார். இதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், வரி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 420 கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. வரி ஏய்ப்பு செய்து சொத்து சேர்த்த ஊழியர்களின் சொத்துக்களைபறிமுதல் செய்ய வேண்டும் என வாதங்களை முன்வைத்தார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தற்பொழுது உள்ள விசாரணை தொடர வேண்டும். இந்த வழக்கில் விசாரணை நடத்தி இந்த வழக்கின் இறுதி குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

விசாரணை வெளிப்படுத்தன்மையுடன் நடைபெறும்

இந்த விசாரணை வெளிப்படுத்தன்மையுடன் நடைபெறும் என்பதை நம்புகிறோம். மதுரை மாநகராட்சி வரி ஏய்ப்பு முறை கேடு குறித்து குறித்த வழக்கு விசாரணையின் குற்றப்பத்திரிக்கையை இரண்டு மாதத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நம்புகிறோம் அதன் பிறகு முறையாக விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட் டை மனு தாரர் எழுப்பினால், இந்த வழக்கு விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும். எனவே இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.