மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட் நிலவரம் என்ன (20.05.2026) மல்லிகைப் பூ முதல் தாமரைப் பூ வரை.

மதுரை மல்லிகைப் பூ விற்பனை

மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மதுரை மையமாக உள்ளதால் மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும்.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:

மதுரை மல்லி கிலோ ரூ.600,

பிச்சி ரூ.400, முல்லை ரூ.300,

செவ்வந்தி ரூ.250,

சம்பங்கி ரூ.30,

செண்டு மல்லி ரூ.80,

கனகாம்பரம் ரூ.400 ,

ரோஸ் ரூ.150,

பட்டன் ரோஸ் ரூ.150,

பன்னீர் ரோஸ் ரூ.200,

கோழிக்கொண்டை ரூ.80,

அரளி ரூ.350,

மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்றுக்கு) ரூ.7 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது

உற்பத்தி அதிகமாக உள்ளதால் தற்போது நாளொன்றுக்கு 5 டன் வரத்து உள்ளது. பொதுவாக நல்ல வெயில் நேரம் மல்லிகை பூ விளைச்சலுக்கு ஏதுவானதாகும். வரும் வாரங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் மல்லிகையின் விலை கிலோ 2000 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன்