மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வரும் நிலையில், பணிகள் முடிந்த பின் மேலூர் பகுதிக்கு முழுமையாக மாறவுள்ளது. இதனால் மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து குறையும் என சொல்லப்படுகிறது.

மதுரை மத்திய சிறைச்சாலை புதிய கட்டடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ரூ.229.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடங்களுக்கு காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், செம்பூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மத்திய சிறைச்சாலை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு பணிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சிறைச்சாலையில் என்ன கட்டடங்கள் அமைகிறது

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, தெற்குதெரு கிராமம், செம்பூரில் புதியதாக அமையவுள்ள மத்திய சிறைச்சாலை பகுதி 1-ல் தண்டணை கைதிகள் தொகுதி தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 1,73,012 ச.அடி பரப்பளவிலும், விசாரணை கைதிகள் தொகுதி தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 1,75,348 ச.அடி பரப்பளவிலும், உயர்பாதுகாப்பு தொகுதி தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 48,532 ச.அடி பரப்பளவிலும், பார்வையாளர்கள் தொகுதி தரைதளம் 8,917 ச.அடி பரப்பளவிலும், தூக்கு மேடை தரைதளம் 291 ச.அடி பரப்பளவிலும், நிர்வாக அலுவலகக்கட்டடம் தரைதளம் மற்றம் முதல் தளத்துடன் 18,949 ச.அடி பரப்பளவிலும், அடுமனை கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 14,533 ச.அடி பரப்பளவிலும், சமையற்கூடம் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 22,078 ச.அடி பரப்பளவிலும், நீதிமன்ற கட்டடம் தரைதளம் மற்றும் முதல்தளத்துடன் 7,029 ச.அடி பரப்பளவிலும், மருத்துவமனை தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 16,648 ச.அடி பரப்பளவிலும், படைமுகாம் கட்டடம் 5,91 ச.அடி பரப்பளவிலும், கண்காணிப்பு கோபுரங்கள் ரங்கள் 9,946 ச.அடி பரப்பளவிலும், வெடிமருந்து அறை 3,88 ச.அடி பரப்பளவிலும், ஜெனரேட்டர் அறை-இரண்டு 1,938 ச.அடி பரப்பளவிலும், பாதுகாவலர் அறை 1,938 ச.அடி என மொத்தம் 5,05,337 ச.அடி பரப்பளவில் அமையவுள்ளது.

சிறைத் துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதிகள்

சிறை அலுவலர்களுக்கான குடியிருப்புகள் சிறைத்துறை துணைத்தலைவர், மதுரை சரகம் குடியிருப்பு தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 3,148 ச.அடி பரப்பளவிலும், சிறைக்கண்காணிப்பாளர் குடியிருப்பு 1,984 ச.அடி பரப்பளவிலும், உதவி சிறைக்கண்காணிப்பாளர் குடியிருப்பு 2,229 ச.அடி பரப்பளவிலும், சிறைஅலுவலர் லுவலர் குடியிருப்புகள் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 4,211 ச.அடி பரப்பளவிலும், உதவி சிறைஅலுவலர் குடியிருப்புகள் 11,591 ச.அடி பரப்பளவிலும், சிறைக்காவலர் குடியிருப்புகள் (20 குடியிருப்புகளை கொண்ட 1 தொகுதி) தரைதளம் மற்றும் 5 தளங்களுடன் 52,020 ச.அடி பரப்பளவிலும், சிறைக்காவலர் குடியிருப்புகள் (8 குடியிருப்புகளை கொண்ட 1 தொகுதி) தரைதளம் மற்றம் 3 தளங்களுடன் 5,216 ச.அடி பரப்பளவிலும் என மொத்தம் 80,400 ச.அடி பரப்பளவில் அமையவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் முருகேசன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்கமார், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.