மதுரை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு 50% மானியம்! வாழ்வாதாரத்தை உயர்த்த அரிய வாய்ப்பு!

1 month ago 4
ARTICLE AD

திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபகரணங்கள் வாங்கும் செலவு - உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்.

நாட்டுக்கோழி பண்ணைஅலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்

மதுரை  மாவட்டத்தில் “கிராமப்புற  வாழ்வாதாரத்தை  மேம்படுத்துவதற்காக 2026-27-ஆம் ஆண்டில் சிறிய அளவிலான (250 கோழிகள், அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணைஅலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு நாட்டுக்கோழி வளர்ப்பில் திறமையும், ஆர்வமும் உள்ள இரண்டு அல்லது மூன்று தொழில் முனைவோர், பய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபகரணங்கள் வாங்கும் செலவு, (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மேலும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்ட பயனாளிகளில் 30 சதவிகிதம் பட்டியலின, பழங்குடி இனத்தை சார்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டுமானப்பணிகள் தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல்

கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுகளுக்கான திட்டங்களில் பயனாளியோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக்கூடாது. கட்டுமானப்பணிகள் தீவனம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளின் தங்கள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விபரம் மூன்று  வருடங்களுக்கு  பண்ணையை  பராமரிப்பதற்கான  உறுதிமொழி  2023-24, 202425 மற்றும் 2025-26 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை  என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். எனவே கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்  என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article