மதுரை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 3 பேர் பலி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?

2 months ago 8
ARTICLE AD

விபத்தில் இரு பேருந்துகளிலும் இருந்து 15 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி.

ஆம்னி பேருந்து விபத்து - மூன்று பயணிகள் பலி.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆம்னி  பேருந்து விபத்து. கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்ற ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து பின்பக்கமாக இடித்துவிட்டு சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்து. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் இருந்து 15 பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் பயணிகள், கனக ரஞ்சிதம் (65), சுதர்சன் (23) மற்றொரு பெண் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு. விபத்து குறித்து மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் திருப்பத்தூர் பகுதியில் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியது குறிப்பிடதக்கது.

விபத்தை குறைக்க விழிப்புணர்வு தேவை

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் பா.ஸ்டாலின் கூறுகையில்..,” மதுரை மாவட்டத்தில் மேலூரில் அதிக கிராமங்கள் கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் மேலூரை கடந்து செல்லும் மதுரை - திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக மேலூர் முதல் கொட்டாம்பட்டிக்கு இடையே அதிக விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சில மாற்றங்களை கொண்டுவரவேண்டும். அதே போல் அப்பகுதி மக்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்”. என கேட்டுக்கொண்டார்

Read Entire Article