மக்கள் பயன்பாட்டில் உள்ள தார்சாலையை ஆக்கிரமிப்பதா? கும்பகோணம் அருகே சாலைமறியல்

4 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள தார்சாலை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் வடபக்கம் கீழ தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் பல ஆண்டுகளாக வடபக்கம் சாலையை கிராம மக்கள் பொது சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் திருநிறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தனிநபர் தனது விவசாய வயலில் வடிகால் வாய்க்கால் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள தார் சாலையில் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் வந்து தார் சாலையை தோண்டுவதற்கான அளவீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது

இதற்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வடபக்கம் கீழ தெரு பொது சாலையை எடுக்கக் கூடாது என கூறி திடீரென கும்பகோணம் நாச்சியார்கோவில் சாலையான திருநறையூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும். இல்லாவிடில் போராட்டம் தொடரும் என்றும் மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த சாலை மறியலால் கும்பகோணம் நாச்சியார்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலைமறியல்

பாபநாசம் அருகே குடிநீர் வசதி வேண்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உத்தாணி தெற்கு தெரு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. உத்தாணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்கவில்லை. இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் பலமுறை வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தஞ்சை- கும்பகோணம்  தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் உட்பட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சாலை மறியலால் தஞ்சை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சமூகத் தீர்வு காணப்பட்டதால் சாலை மறியல்  போராட்டம் கைவிடப்பட்டது.

Read Entire Article