மதுரையில் "தமிழியல் கலைக்களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா: முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

"தமிழியல் கலைக்களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று மாலை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் "தமிழியல் கலைக்களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில், தமிழியல் ஆய்வுகளுக்கு இந்தக் கலைக்களஞ்சியம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். தலைமையுரை ப. சிதம்பரம், எம்.பி. (மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் தமிழ் வளர்ச்சிக் கழக அறங்காவலர் குழுத் தலைவர்) அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், தமிழ் மொழியின் செழுமையையும், அதன் வரலாற்று ஆவணங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பா.சிதம்பரம் பேசுகையில்

மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் பேசுகையில் "தமிழ் வளர்ச்சிக் கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு 2 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கியது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் சார்பில் 1 கோடி ரூபாய் வைப்பு நிதியாக அளிக்க உள்ளோம். என்சைக்லோபீடியா, பிரிட்டானியா தான் கலைக் களஞ்சியம் என எல்லொரும் தெரிந்திருக்கும். தமிழ் கலைக் களஞ்சியத்தின் திருந்திய பதிப்பு அல்லது மறு பதிப்பை ஒருநாள் வெளியீடுவோம் எனும் நம்பிக்கை உள்ளது. கலைக் களஞ்சியம் 1968 ல் நின்று போய் விட்டது, கலைக் களஞ்சியம் வராததால் பல தகவல்கள் இல்லாமல் போனாது. தமிழியல் கலைக் களஞ்சியத்திற்கு பின் ஏராளமான நூல்கள் வந்துவிட்டது. 50 ஆண்டுகளின் களஞ்சியத்தை தொகுத்து தமிழியல் கலைக் களஞ்சியம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழியல் கலைக் களஞ்சியத்தில் எந்த பக்கத்தை படிக்கலாம். தமிழியல் கலைக் களஞ்சியத்தில் புதிய சொற்த்தொடர் உள்ளது. தமிழியல் கலைக் களஞ்சியம் புது முயற்சி, பெரும் முயற்சியாக அமைந்துள்ளது. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நூல்கள் வெளியீடப்படும். சினிமாவின் முதல் காட்சிக்கு செலவிடும் தொகையை விட நூல்கள் வாங்கும் செலவு குறைவாக தான் உள்ளது" என பேசினார்.

சு.வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கும், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கும் எந்த சம்பந்தமில்லை. பாஜகவின் சூழ்ச்சியால் மகளிர் இட ஒதுக்கீடு எனும் கேடயத்தை பயன்படுத்தி தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பது சிக்கல் நிறைந்தது. அனைத்து கட்சி கூட்டம், அனைத்து முதலமைச்சர்கள் ஆலோசனை நடத்தி உருவாகப்பட்ட மசோதைவை நாடாளுமன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும். நாடாளுமன்ற மறுவரையறை மசோதா மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை. சட்டமன்ற தேர்தலில் சதவீத உயர்வுக்கு காரணம் SIR. கடந்த 5 தேர்தல்களின் எண்ணிக்கை கூட இந்த தேர்தலில் பிரதிபலிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, 4 அல்லது 5 அணிகள் போட்டியிடும் போது ஆளும் கட்சியின் வெற்றி, வாக்கு சதவீதம் இயல்பாக அதிகரிக்கும். தவெகவின் வெற்றிகளை கணக்கு போட்டு பார்க்க முடியாது, மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரட்டும் பார்க்கலாம். சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்ய வேண்டும்" என கூறினார்.