மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?

4 months ago 4
ARTICLE AD

ஒரு காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சியில் அபரிமிதமாக இருந்து வந்த தமிழ்நாடு பின்னர் அரசு எடுத்த பல்வேறு முயற்சியால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு:

பொருளாதார நிலை, அதிகரித்து வரும் செலவு உள்ளிட்ட பல காரணங்களால் பல பெற்றோர்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது.

2020ம் ஆண்டு :

மொத்த குழந்தைகள் பிறப்பு  - 9 லட்சத்து 24 ஆயிரத்து 256

ஆண் குழந்தைகள் - 4 லட்சத்து 76 ஆயிரத்து 054

பெண் குழந்தைகள் - 4 லட்சத்து 70 ஆயிரத்து 043

2021ம் ஆண்டு:

மொத்த குழந்தைகள் பிறப்பு - 9 லட்சத்து 12 ஆயிரத்து 869

ஆண் குழந்தைகள் - 4 லட்சத்து 70 ஆயிரத்து 043

பெண் குழந்தைகள் - 4 லட்சத்து 42 ஆயிரத்து 797

2022ம் ஆண்டு:

மொத்த குழந்தைகள் பிறப்பு - 9 லட்சத்து 36 ஆயிரத்து 361

ஆண் குழந்தைகள் - 4 லட்சத்து 82 ஆயிரத்து 531

பெண் குழந்தைகள் - 4 லட்சத்து 53 ஆயிரத்து 801

2023ம் ஆண்டு:

மொத்த குழந்தைகள் பிறப்பு - 9 லட்சத்து 02 ஆயிரத்து 329

ஆண் குழந்தைகள் - 4 லட்சத்து 65 ஆயிரத்து 063

பெண் குழந்தைகள் - 4 லட்சத்து 37 ஆயிரத்து 249

2024ம் ஆண்டு:

மொத்த குழந்தைகள் பிறப்பு - 8 லட்சத்து 47 ஆயிரத்து 668

ஆண் குழந்தைகள் - 4 லட்சத்து 37 ஆயிரத்து 397

பெண் குழந்தைகள் - 4 லட்சத்து 10 ஆயிரத்து 241

தொடர் சரிவு:

கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்தாண்டு 8.47 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. பிறப்பு விகிதம் என்பது கடந்த 2023ஐ காட்டிலும் 2024ம் ஆண்டில் 6.09 சதவீதம் சரிந்துள்ளது.

தற்போதுள்ள இந்திய மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை அதே அளவில் நீடிக்க ஆண்டுதோறும் பிறப்பு விகிதம் தேசிய அளவில் 2.10 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், இந்திய அளவில் இது 1.90 சதவீதம் உள்ளது. தமிழ்நாட்டு அளவில் 1.40 சதவீதமாக உள்ளது.

ஆரோக்கியமானதா?

தமிழக அளவிலும், இந்திய அளவிலும் தற்போதுள்ள கணக்கீட்டின்படி குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு என்பது சில விஷயங்களில் ஆரோக்கியமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் இதேபோன்று ஆரோக்கியமானதாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாகும்.

மேலும், ஒரு வீட்டில் ஒரே குழந்தை மட்டுமே இருப்பது என்பது தனிப்பட்ட முறையில் அண்ணன் - தம்பி, அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி, அக்கா - தங்கை போன்ற சகோதரத்துவத்தின் பாசம் கிடைக்காத சூழலை உண்டாக்கும் அபாயமும் இருப்பதாகவும், இது அந்த குழந்தைகளின் மன நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article