மகிழ்ச்சியான செய்தி! மகாராஷ்டிரா வங்கியில் 500 வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பியுங்கள்!

4 months ago 4
ARTICLE AD

பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் நிரந்தர பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 13ம் தேதி முதல் தொடங்கி இருக்காங்க. வரும் 30ம் வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

பொது அதிகாரி (Generalist Officer) 500

இவை எஸ்சி - 75, எஸ்டி - 37, ஒபிசி - 135, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 50, பொதுப் பிரிவு - 203 என்ற அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதில் 20 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா வங்கியில் உள்ள பொது அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் குறைந்தபட்சம் 22 வயது இருக்க வேண்டும். மேலும், அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.

வங்கி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு கல்வியை 60 சதவீதம் தேர்ச்சியுடன் முடித்திருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது பட்டய கணக்காளர் தகுதி பெற்றிருக்க வேண்டும். CMA / CFA / ICWA பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விண்ணப்பதார்கள் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத அடிப்படை சம்பளமாக ரூ.64,820 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது அதிகாரி பதவிகளுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள். இரண்டிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தெரிவு பட்டியல் வெளியாகும். குறைந்தபட்ச தேர்ச்சியாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்கள், இதர பிரிவினர் 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

https://bankofmaharashtra.in/current-openings என்ற இணையதளத்தில் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்த வேண்டும். இதற்கான தேர்வு மையம் சென்னையில் அமைக்கப்படும். ஆன்லைன் வழியாக வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே கால தாமதம் செய்யாமல் உடன் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Read Entire Article