உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்ப மேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வரும் கும்பமேளாவில் நாள்தோறும் துறவிகள், பக்தர்கள், சாதாரண மக்கள் என ஏராளமானோர் புனித நீராடி வருகின்றனர். இந்தநிலையில் மகா கும்ப மேளாவில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி நிறைவு பெறவுள்ள நிலையில், பிரயாக்ராஜை நோக்கி வரும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கும்பமேளா நிறைவு நாளில் மகா சிவராத்திரி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.