மகள்களை நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய ரஜினி...செளந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல்

2 months ago 11
ARTICLE AD

ரஜினியின் இரு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகிய இருவரும் திரைத்துறை பணியாற்றி வந்தாலும் கேமரா முன் அவர்கள் நடிகராக தோன்றியதில்லை. தனது இரு மகள்களையும் கேமரா முன் நடிக்க கூடாது என ரஜினி ரொம்ப கண்டிப்பாக இருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

திரைப்படங்களில் டைட்டில் மற்றும் கிராஃபிக் டிசைனிங்கில் பணியாற்றி வந்த செளந்தர்யா ரஜினிகாந்த் , வெங்கட் பிரபு இயக்கிய கோவா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து இந்தியாவில் முதல்முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். தற்போது  அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள வித் லவ் திரைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பேசிய அவர் தான் நடிக்க வராதது குறித்த காரணத்தை பற்றி வெளிப்படையாக பேசினார்.

மகள்கள் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்

தனது இரு மகள்களையும் ஏன் ரஜினி நடிக்க அனுமதிக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த செளந்தர்யா ரஜினிகாந்த் " என் அப்பாவுக்கு சினிமாவில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பின் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிய எதிர்காலம் இல்லை என்பதை அப்பா உணர்ந்தார். நடிகர்களைக் காட்டிலும் நடிகைகளுக்கு சினிமாவில் குறைந்த ஆயுள்தான் இருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் நாங்கள் நடிக்க வந்து பின் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை அப்பா விரும்பவில்லை. அதனால் எங்களது மனநலம் பாதிக்கப்படும் என்று அவர் கருதியிருக்கலாம். எனக்கு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால் என் அப்பா சொன்னதை தான் சீரியஸாக எடுத்துக்கொண்டே. அதே நேரம் நான் கிரியேட்டிவான ஒரு நபர் என்பதால் நான் கேமராவுக்கு முன் இருப்பதைவிட கேமராவுக்கு பின் இருப்பதையே விரும்பினேன்" என்று செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Read Entire Article