மகளிர் உரிமைத் தொகை வருமா? வராதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர்!

2 months ago 5
ARTICLE AD

மயிலாடுதுறை: வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் ஏற்றப்பட உள்ள நிலையில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நடைபயணமாக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் தவெகவை சேர்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது சீர்காழியில் அவர் செய்தியார்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;

பாதயாத்திரை அனுபவமும் மக்கள் வரவேற்பும்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் நெ.மரிய வில்சன், கடந்த 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து வேலாங்கண்ணிக்கு புனிதப் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டின் பாதயாத்திரை தமக்கு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட அவர், முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகவும், நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் யாத்திரை இது என்பதால் தனித்துவமான உணர்வை அளிப்பதாகத் தெரிவித்தார். கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளைக் கடந்து செல்லும் வழியெங்கும் மக்கள் தமக்கு அளித்து வரும் பெரும் வரவேற்பு மிகுந்த மனநிறைவை தருவதாக அவர் பகிர்ந்துகொண்டார்.

நடப்பு ஆட்சியின் முதல் 100 நாட்களின் செயல்பாடுகள் குறித்து மக்கள் தங்களுடைய அனுபவங்களை வழியெங்கும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக, சட்டமன்ற நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்பைச் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வருவதாகவும், சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதங்கள் மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகியவை மக்களுக்கு மிகுந்த திருப்தியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

100 நாள் ஆட்சி சாதனை மற்றும் லஞ்ச ஒழிப்பு

அரசின் 100 நாள் சாதனை குறித்துப் பேசிய நிதியமைச்சர், தற்போதைய ஆட்சியின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான சாதனையாக லஞ்ச ஒழிப்பு அமைந்திருக்கிறது என்றார். முதலமைச்சர் பதவியேற்ற முதல் நாளிலிருந்தே ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கடந்த 100 நாட்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முற்போக்கான முன்னேற்றங்கள் சாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இதையே அரசின் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறார்கள். வரும் நாட்களில் இந்த நேர்மையான நிர்வாக முறை மேலும் வலுப்படுத்தப்பட்டு, இன்னும் சிறப்பான சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மகளிர் உரிமைத் தொகை மற்றும் நிதி மேலாண்மை

தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்த அமைச்சர், அது ஏமாற்றம் தரும் செயல் அல்ல என்று கூறினார். முன்னதாக வெளியிடப்பட்ட நிதி நிலைமை குறித்த வெள்ளையறிக்கையில் (White Paper) மாநிலத்தின் தற்போதைய நிதிச் சூழல் மிகவும் தெளிவாக மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது அரசு நிதி ஆதாரங்களைப் பெருக்குவதிலும், வருவாயை சீரமைப்பதிலும் (Revenue Mobilization) தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வணிகவரி, முத்திரைத்தாள் மற்றும் பதிவுத்துறை, ஜி.எஸ்.டி (GST) போன்ற பல்வேறு துறைகளில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் மாநிலத்தின் நிதி நிலைமை விரைவிலேயே சீரடையும். அரசுக்கு வருவாய் சீராக வரத் தொடங்கியதும், முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாகச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பள்ளிக் கல்வித்துறை விமர்சனங்களுக்குப் பதில்

கடந்த கால ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகச் சாட்டிய நிதியமைச்சர் மரிய வில்சன், அத்துறையில் நடைபெற்ற புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே கைது நடவடிக்கைகள் வரை சட்டரீதியாகப் பாய்ந்துள்ளன என்பதை நினைவுபடுத்தினார்.

அரசு வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, முந்தைய ஆட்சியில் கல்வித்துறை எவ்வாறு இருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, எதிர்க்கட்சியினர் இதைப் புரிந்து கொள்ளாமல் பேசி வருவதாகவும், இதுபோன்ற ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலையும் விளக்கத்தையும் அவர்கள்தான் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசியல் நிலவரம் மற்றும் நாட்டின் தலைமை

அரசியல் களத்தில் நிலவும் பல்வேறு யூகங்கள், கூட்டணி குறித்த விவாதங்கள் மற்றும் பாஜக பி-டீம் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இவை அனைத்தும் மிகவும் வேடிக்கையானவை என்றும், மக்கள் இதையெல்லாம் நம்பும் நிலையில் இல்லை என்றும் கூறினார். பொதுமக்களுக்கு அனைத்து விஷயங்களும் மிகத் தெளிவாகத் தெரியும்.

எதிர்கால நாட்டின் தலைமை மற்றும் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், மக்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்றும், முதலமைச்சர் என்று மக்கள் தான் சொன்னார்கள் தற்போது பிரதமர் என்பதையும் மக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர் என்றும் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Read Entire Article