'போலி மாத்திரை விவகாரம் - பேரவையை முற்றுகையிட வந்த 200 பேர்' புதுச்சேரியில் பரபரப்பு..!

2 weeks ago 2
ARTICLE AD

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வைத்து இதில் சமந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஜே.சி.எம் மக்கள் மன்றத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிமையில் ஜே.சி.எம் மன்றத்தினர் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விவகாரம்!

புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரிய வந்தது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்

அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர். இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிபிஐ விசாரணை வேண்டும் - ஜேசிஎம்!

இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

Read Entire Article