அர்ஜுன் சம்பத் மத மோதல்களை தூண்டும் விதமாக போலி செய்திகளை பரப்புவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீர்த்திகா தங்கப்பாண்டியன் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து சொல்லாத ஒரு தகவலை சொல்லியதாக சமூக வலைதளத்தில் செய்தி பகிரப்பட்டது, இதனையடுத்து திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

அர்ஜூன் சம்பதின் சமூக வலைதளத்தை முடக்க வேண்டும்

பின்னர் வழக்கறிஞர்களை சந்தித்த வழக்கறிஞர் நாகேந்திரன் கூறுகையில் "இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கீர்த்திகா தங்கப்பாண்டியன் மீது அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். திருப்பரங்குன்றத்தில் மத மோதலை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அர்ஜுன் சம்பர் செயல்பட்டு வருகிறார், அர்ஜுன் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும், அர்ஜூன் சம்பதின் சமூக வலைதளத்தை முடக்க வேண்டும்" என தெரிவித்தார்.