பொங்கல் பரிசு 2026: ரூ.3000 பெறவில்லையா? புகார் அளிக்க உடனே இந்த எண்களை அழையுங்கள்!

3 months ago 8
ARTICLE AD

"2026 ஆம் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம், ரூ.3000 பெறுவதில் பிரச்சனை இருந்தால் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது."

தமிழக அரசின் பொங்கல் பரிசு

அரசாணை (2டி) எண்.51 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள். 31/12/2025 ன் படி 2026 ஆம் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் ரூ.3000/- ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரையுடன் முழு கரும்பு வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது..

செங்கல்பட்டு மாவட்டத்தில் தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 08.01.2026 முதல் 12.01.2026 வரை பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் முன்கூட்டியே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

கைபேசிக்கு குறுஞ்செய்தி

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 08.01.2026 முதல் 12.01.2026 வரை, தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு நியாயவிலை கடை விற்பனை முனைய இயந்திரத்தின் பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பொங்கல்பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் அங்கீகரிக்கப்பட்ட நபர் (இணைய வழியாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி நபர் நீங்கலாக) வாயிலாகவோ அல்லது இதர நபர் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது.

புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு:

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் மாவட்ட கட்டுபாட்டு அறை எண் 044-27426872 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் மேலும் கீழ்கண்ட அலுவலர்களின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

1. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 9498341045

2. வட்ட வழங்கல் அலுவலர் செங்கல்பட்டு – 9445000172

3. வட்ட வழங்கல் அலுவலர் மதுராந்தகம் -9445000174

4. வட்ட வழங்கல் அலுவலர் திருக்கழுக்குன்றம் 9445000173

5. வட்ட வழங்கல் அலுவலர் திருப்போரூர் – 9445796413

6. வட்ட வழங்கல் அலுவலர் வண்டலூர் -9498341047

7. வட்ட வழங்கல் அலுவலர் செய்யூர் – 9445000175

எனவே தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article