3 முறை ரிஜெக்ட் செய்த நஸ்ரியா..ரோலக்ஸ் படம் எப்போ...ஹைதராபாதில் சூர்யா பேச்சு

1 hour ago 1
ARTICLE AD

ஹைதராபாதில் நடைபெற்ற சீன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். சீன் படத்தைப் பற்றி பேசி முடித்தப்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படம் குறித்து பேசியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. நஸ்ரியா நஸிம் இப்படத்தில் கதா நாயகியாக நடித்துள்ளார். சுஷின் ஷியாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். சீன் படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஹைதராபாதில் நடைபெற்றது.

த ஒன் என்கிற அடைமொழி குறித்து பேசிய சூர்யா " த ஒன் என்கிற அடைமொழி என்பது நான் மட்டும் இல்லை. அது நாம் அனைவரும் இணைந்ததாக தான் பார்க்கிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பம். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேடையில் நிற்கிறேன். இந்த படம் ஒரு மர்டர் , மிஸ்ட்ரி , த்ரில்லர் மற்றும் நிறைய நகைச்சுவையான படமாக இருக்கும். இந்த படத்தில் நிறைய புது திறமையானவர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். நிச்சயமாக இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் " என்று கூறினார்.

3 படங்களை மறுத்த நஸ்ரியா

நஸ்ரியா நஸிம் குறித்து பேசிய கூறிய சூர்யா தன்னுடன் நடிக்க நஸ்ரியா மூன்று முறை மறுத்ததாக தெரிவித்தார். "நான் எப்போதும் நஸ்ரியாவுடன் பணியாற்ற விரும்பியிருக்கிறேன். என்னுடைய மூன்று படங்களுக்கு அவரை கேட்டு அவர் மறுத்துவிட்டார். இந்த முறை ஓக்கே சொன்னார். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் அவர் பல படங்களை மறுத்திருக்கிறார். இதை எல்லாம் கடந்து ஒரு நடிகராக உங்களை பார்த்து நான் மதிக்கிறேன். உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் தெளிவையும் ரொம்ப ரசிக்கிறேன். ஒரு சீனுக்காக நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளும் விதத்தை நான் ரொம்ப ரசித்தேன்.

ரோலக்ஸ் படம் பற்றி

ரோலக்ஸ் படம் குறித்து சூர்யா இந்த நிகழ்ச்சியில் பேசினார் " ரோலக்ஸ் படத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம். இதற்கு பின் நிறைய பணிகள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜிடம் என்னிடம் பேச சொல்லுங்கள். என்னை வந்து சந்திக்க சொல்லுங்கள். ஹீரோவாக நடிக்க வேண்டுமா வில்லனாக நடிக்க வேண்டுமா? நிறைய ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த ஒரு முறை வில்லனாக பண்ணலாம்." என்று சூர்யா தெரிவித்தார்.

Read Entire Article