"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" லஞ்ச குற்றச்சாட்டுகள்.. அதானி குழுமம் விளக்கம்!

1 year ago 8
ARTICLE AD

சோலார் எனர்ஜி ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாக கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

அதானி குழுமத்தின் விளக்கம்:

இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அதை மறுக்கிறோம்.

அமெரிக்க நீதித்துறை சொன்னது போல், "குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டவை அனைத்தும் குற்றச்சாட்டுகளே. வைக்கப்படும் குற்றங்கள் யாவும் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதியே". அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மிக உயர்ந்த தரமான நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை பராமரிப்பதில்  அதானி குழுமம் எப்பொழுதும் உறுதியாக உள்ளது. எங்கள் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து விதமான சட்டங்களையும் மதித்து செயல்படுகிறோம் என்பதை உறுதியளிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது.

Know more: https://t.co/uNYlCaBbtk pic.twitter.com/fQ4wdJNa9d
— Adani Group (@AdaniOnline) November 21, 2024

லஞ்சம் கொடுத்ததா அதானி குழுமம்?

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை  இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து, 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் அதானியின் க்ரீன் எனர்ஜி நிறுவனம், 3 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நிதியை கடன்கள் மற்றும் பத்திரங்கள் மூலமாக, பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளின் அடிப்படையில் திரட்டியதாக  புகார் எழுந்துள்ளது.

இது அமெரிக்க லஞ்ச ஒழிப்புச் சட்டமான, வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படுகிறது. நியூயார்க் நீதிமன்ற பதிவுகளின்படி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளார். அந்த வாரண்டுகளை வெளிநாட்டு சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் 20% வரை சரிந்தன, அதானி கிரீன் 18% மும்பை பங்குச் சந்தையில் (BSE) சரிந்தது. அதானி கிரீன் எனர்ஜி பத்திரங்கள் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article