பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !

4 months ago 5
ARTICLE AD

அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  விருதுநகர்        மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.

அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.

இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:

1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.
5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read Entire Article