பெரம்பூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தபோது தவெக தலைவர் விஜயை விமர்சித்து பேசியுள்ளார். அதே நேரம் சத்யராஜின் மகனான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீல் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் திரைப்பட நடிகர்கள் பலர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார்கள். திமுக வேட்பாளர் ஆர் டி சேகரை ஆதரித்து சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய் குறித்து பேசிய சத்யராஜ் " விஜய் , அம்பேத்கர் , பெரியாரை தனது கொள்கை தலைவராக அறிவித்தபோது சந்தோசமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து அவர் முதலமைச்சரை மரியாதை இல்லாமல் பேசினார். முதலில் ஸ்டாலின் சார் என்றார் . பின்னர் ஸ்டாலின் அங்கிள் என்று பேசினார். எல்லோரையும் மரியாதையாக பேசும் விஜயா இப்படி பேசுவது என அதிர்ச்சியாக இருந்தது. நாம் பார்த்த விஜய் இது இல்லை. விஜயின் தலைவா பட வெளியாகாத போது கொடநாட்டிற்கு சென்று ஜெயலலிதாவிடம் 'அம்மா அம்மா என்னை மனிச்சிடுங்க. என்னுடைய தலைவா படத்தை ரிலீஸ் பண்ணுங்க ' என்று பேசினார். அப்படி பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் என்று பேசிவிட்டார். இதுவே ஜெயலலிதாவை இப்படி பேசியிருந்தால் அவர் கொத்து ப்ரோட்டா போட்டிருப்பார். ஒரு முதலமைச்சர் பெருந்தன்மையாக இருக்கிறார் என்பதற்காக என்ன வேண்டுமானால் பேசுவதா ? சின்ன சம்பளம் வாங்கும் என்னையே மக்கள் வந்து பார்க்க முடிவதில்லை. பெரிய சம்பளம் வாங்கும் விஜயை மக்கள் எங்கே போய் சந்திப்பது. " என சத்யராஜ் பேசியுள்ளார்

சிபிராஜ் ட்வீட்

ஒருபக்கம் நடிகர் சத்யராஜ் விஜயை விமர்சித்து பேசியுள்ள நிலையில் அவரது மகன் சிபிராஜ் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் சிபிராஜ் ' உசுப்பேத்துறவன உம்முனும் கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு இருக்கும் " என்கிற விஜய் பேசிய வசனத்தை பதிவிட்டுள்ளார்.

pic.twitter.com/59dWpB7gP0

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2026