பிரபல மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் பிரசவம் பற்றிய தற்கால பெண்களின் நிலைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

கேரளம் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அகில் மாரார் பிரசவம் என்பது பெண்கள் ஒரு காலத்தில் மிகவும் இயல்பாகச் செய்துவந்த ஒரு விஷயம். கர்ப்பம் தரித்தால் அந்தப் பெண்ணை பயமுறுத்தி அவளுக்கு ஏதேனும் ஒரு கொடிய நோயை வரவழைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என தெரிவித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக வருத்தம் தெரிவிப்பதற்கு பதில் அகில் மாரார் விளக்கம் கொடுக்க அது மேலும் கண்டனத்தைப் பெற்றது.

இந்த நிலையில் மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் பிரசவம் பற்றி பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. அதில், “பிரசவம் எளிதானது என்று யாரும் கூறிவிடக் கூடாது. நான் குழந்தைப் பெற்றிருக்கிறேன். பிரசவத்திற்கு பிறகு எனக்குள் ஏற்பட்ட வலியைத் தன் வாழ்வில் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

நம்முடைய அம்மா, பாட்டி காலத்தில் எல்லாம் எளிதாக இருந்திருக்க வேண்டும். காரணம் அந்த நேரத்தில் சுகாதார நிலை அப்படித்தான் இருந்தது. இன்று இருக்கும் நிலைமை அப்போது இல்லை. தற்போதெல்லாம் பிறந்த நொடியில் இருந்தே நாம் ஒரு இயந்திரத்தின் உதவியுடன் தான் இருக்கிறோம்.

நான் பயத்தால் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெறுவதை பற்றி யோசித்தேன். எனக்கு அறுவை சிகிச்சை ஒரு அரசு மருத்துவமனையில் தான் நடந்தது. நான் நல்ல வசதிகளுடன் பிரசவித்தேன். ஆனால் குழந்தை பெற்றபோது ஏற்பட்ட வலியை என்னல் மறக்கவே முடியாது. அப்போது மூச்சு விடவே மிகுந்த சிரமப்பட்டேன். தத்துவம் பேசுபவர்களிடம் இதையெல்லாம் நான் எளிதாகச் சொல்லிவிடுவேன். ஆனால் மாசுபடாத சூழலிலும், கலப்படம் இல்லாத உணவிலும் இதையெல்லாம் கடந்து வந்த தலைமுறை எங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இது மிகப்பெரிய முட்டாள்தனம்.

என்னை என் அம்மா கருவில் சுமந்தபோது ஒருநாள் குளத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வலி ஏற்பட குடத்தை அங்கேயே போட்டு விட்டு நேராக அரசு மருத்துவமனை சென்று குழந்தை பெற்றார். அது அந்த காலத்தில் எளிதாக இருக்கலாம்.

ஆனால் ஒரு காலத்தில், பெண்கள் பிரசவத்தை மிகவும் சாதாரணமாக கையாண்டார்கள். கடந்த காலத்தில் பெண்கள் பிரசவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தனர். தற்போது மருத்துவமனைகள் நிலைமையைச் சிக்கலாக்கி விட்டன. முற்காலப் பெண்கள் மிகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர். அவர்களுடன் இக்கால பெண்களை ஒப்பிடாதீர்கள். எதற்கும் நமக்கு உடல் வலிமை இல்லை” என மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.