பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...

10 months ago 7
ARTICLE AD

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சுமார் 32 கி.மீ நீளத்தில், வாகனங்கள்  செல்லும் வகையிலும், மெட்ரோ ரயில் செல்லக்கூடிய வகையிலும் என ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள் கொண்ட பாலங்கள் அமைக்கவுள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையி, மெட்ரோ எங்கு வரவுள்ளது, டபுள் டக்கர் என்றால் என்ன , கர்நாடக அரசு தெரிவித்தது குறித்தும் பார்ப்போம்.

பெங்களூருவில் இரண்டு அடுக்கு மேம்பாலங்கள்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும், பெங்களூரில் வெளிவட்ட சாலையில் (ORR)  இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, வாகனங்கள் செல்லக்கூடிய சாலையையும், மெட்ரோ ரயில் செல்லக்கூடிய ரயில் வழித்தடம் இருக்கும் வகையிலும், இரண்டு அடுக்கு வழித்தடங்கள் இருக்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே பில்லரில் முதல் அடுக்கு வாகனங்கள் செல்லும் வகையிலும், 2வது அடுக்கில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படும்.

ஜே.பி.நகரில் இருந்து ஹெப்பால் வரை 32.15 கிமீ நீளமுள்ள இந்த திட்டம், நகரின் மிக நீளமான மேம்பாலம் ஆகும். இது ராகிகுட்டா-சில்க் போர்டு பாதையில் ஏற்கனவே உள்ள 5-கி.மீ இரட்டை அடுக்கு மேம்பாலம் போன்றது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு அடுக்குகள் கொண்ட மேம்பாலமானது சுமார் 9,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.கே.சிவக்குமார்

இத்திட்டம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதாவது " ராகிகுட்டா சாலையில் உள்ள வடிவமைப்பைப் போலவே, எதிர்கால மெட்ரோ திட்டங்களுக்கு சாலையை அமைக்க உள்ளோம். இந்த அணுகுமுறையானது, சாலை விரிவாக்கத்திற்காக சொத்துக்களைப் கைப்பற்றுவதில் ஏற்படும், அதிக செலவுகளைத் தவிர்க்கிறது"

மாற்றுப்பாதைகளின் தேவையை நீக்குகிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவது இந்த திட்டத்தில் அடங்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆய்வுக் கூட்டத்தில் கூறினார்.

அப்போது ஹெப்பால், பெல் ரோடு, சும்மனஹள்ளி மற்றும் கோரகுண்டேபாளைய சந்திப்பு போன்ற முக்கிய இடங்களுக்கு சென்று, இந்த திட்டத்தை சமீபத்தில் ஆய்வு செய்தார்.

மறுவடிவமைப்பு மெட்ரோ பயனர்களுக்கு தற்காலிக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், இது கோரகுண்டேபாளையத்தில் போக்குவரத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக டாக்டர் ராஜ்குமார் நினைவகம் மற்றும் BEL வட்டம் இடையே பயணிக்கும் வாகனங்கள். இரட்டை அடுக்குத் திட்டம் சிக்னல் இல்லாத தாழ்வாரத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.! நடந்தது என்ன?

மத்திய அரசு அனுமதி:

இந்த திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. 40 கி.மீ.க்கு மேல் உள்ள நம்ம மெட்ரோவின் மூன்றாம் கட்டத்தின் இரு பாதைகளும், இரட்டை அடுக்கு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று அதிகாரிகள் தெவிக்கின்றன.

இந்த முன்முயற்சிக்கான சாத்தியக்கூறு ஆய்வு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும்,  இருப்பினும் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால்,  மெட்ரோ சிவில் பணிகளுக்கான டெண்டர் செயல்முறையை தாமதப்படுத்தி உள்ளன என்று தகவல் தெரிவிக்கின்றன.

இரட்டை அடுக்கு மேம்பால திட்டத்தை செயல்படுத்த,  ஜே.பி.நகர் மற்றும் கெம்பாபுரா இடையே, குறிப்பாக கோரகுண்டேபாளையாவில் உள்ள 32.15-கிமீ பாதையில் ஒரு பெரிய மறுவடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு அடுக்கு மேம்பாலம் ( மாதிரி படம் )

பெங்களூரு மெட்ரோ:

பீன்யாவில் ஒரு பரிமாற்ற நிலையத்திற்கு பதிலாக, சந்திப்புக்கு அருகில் புதிய மெட்ரோ நிலையத்தை அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர். இந்த இரண்டு அடுக்கு மேம்பாலங்களால் கட்டுமான செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரயில் நிலையத்தை பீன்யா மற்றும் கோரகுண்டேபாளைய ஆகிய இரு இடங்களுக்கும் இணைக்கும் பயணிகளால் பயணிகள் பயனடைவார்கள்.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 3, கட்ட மெட்ரோ பணிகளின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.15,611 கோடியாகும். இதை வரும், 2029 ஆம் ஆண்டிற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது, தினசரி சுமார் 7,85,000 பயணிகள் பயணிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், பெங்களூரின் மெட்ரோ நெட்வொர்க், மொத்தம் 222.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்துப்படுகிறது.

Read Entire Article