புதுச்சேரியில் பயங்கரம்... பட்டப்பகலில் 3 இளைஞர்கள் வெட்டிக்கொலை

10 months ago 7
ARTICLE AD

பட்டப்பகலில் மூன்று பேர் படுகொலை

புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் கொலை

புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு படுகாயங்களுடன் கிடந்த  ஒருவரை மீட்டு அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ரிஷி மற்றும் தேவா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டிக்கொல்லப்பட்ட ரிஷி, பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு நபர் திடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி என்பதும் தெரியவந்துள்ளது. ஆதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் உயிரிழந்தார். கொலை சம்பவம் நடந்த இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read Entire Article