புதுச்சேரி: மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் 618 அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்ப்பு

புதுச்சேரியில் மத்திய அரசின் சாக்சம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மொத்தம் 618 அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

மத்திய அரசின் சாக் ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ், அடிப்படை கவுரவ ஊதியத்தில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) என, மொத்தம் 618 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பின், தேர்வு குழு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏற்கனவே கூகுள் படிவங்கள் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பணிக்கு 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எந்தவொரு பிரிவுக்கும் வயது தளர்வு கிடையாது.

விண்ணப்பத்தாரர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 22ம் தேதி மாலை 5:00 மணி வரை இணையதளம் மூலம் https://wcd.py.gov.in அல்லது https://www.py.gov.in மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள இந்தக் காலிப்பணியிட நியமனங்கள் குறித்த கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட இணையதள முகவரிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அங்கன்வாடி தொழிலாளர்களுக்கான திட்டங்கள்

அங்கன்வாடி சேவைகள் என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றாகும், இது 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்ற பயனாளிகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) மற்றும் உதவியாளர்கள் (AWH) ஆகியோரின் பெரிய வலையமைப்பு மூலம் குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் மேம்பாட்டை வழங்குகிறது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன: