நாடு முழுவதும் நடப்பாண்டில் 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள இடவசதி மற்றும் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு இந்த புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்படவுள்ளது.

புதிய புற்றுநோய் மையங்கள்:

புற்றுநோய் மையங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விரிவாக குறிப்பிடுகையில், "மாநில அரசுகள் வழங்கும் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு இந்த மையங்கள் இதர அரசு சுகாதார நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு தகவல்:

ஒவ்வொரு மையமும் 1.49 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இத்தகைய மையங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கான இடைவெளியை குறைக்க உதவிடும். இதற்கென மாநில அரசுகளுக்கு தேவைப்படும் நிதியுதவி தேசிய சுகாதார இயக்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.

Update on Day Care Cancer Centres

More than 200 Day Care Cancer Centres approved for establishment across the country for Financial Year 2025-26

Read here: https://t.co/6KUyYCnD9x#ParliamentQuestion pic.twitter.com/KWLssIj7Ns

— PIB India (@PIB_India) July 25, 2025

2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி மாநில அரசுகளின் ஆலோசனைகளுடன் புற்றுநோய் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தரவுகள் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன்படி 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது" என்றார்.

மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட இடம்பெறவில்லை. புதுச்சேரியை பொறுத்தவரையில், காரைக்காலில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் மையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்