தஞ்சாவூர்: தஞ்சாவூர் உழவர் சந்தையில் இன்று 16ம் தேதி காய்கறிகள் இந்த விலைக்குதான் விற்கிறாங்க. விவசாயிகள் நேரடியாக வந்து விற்பனை செய்யும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை கன ஜோராக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று விற்பனை சூடுபிடித்துள்ளது.

1. தக்காளி -38
2. கத்தரி: வரி 28, மணப்பாறை 44
3. வெண்டை-40
4. புடலை -50,60
5. .அவரை-90,128
6.பாகல்-56,66,90
7. முள்ளங்கி -34
8. முருங்கை -44
9. மாங்காய்-20
10. கொத்தவரை-40
11. ப மிளகாய்-40
12. பீர்க்கங்காய் -44
13. பரங்கி- 20
14. பூசணி-24
15. சுரைக்காய்-30
16. வாழைக்காய்- 40
17. தேங்காய் -60
18. காலிபிளவர் -44
19. பீன்ஸ் -144
20. உருளை-26
21. கேரட்-60
22. பீட்ரூட் -50,56
23. சௌசௌ-44
24.முட்டைக்கோஸ்-40
25. பல்லாரி- 28
26.சி.வெங்காயம்-56
27. சேனை -36
28. சேம்பு -60
29. கரணை-76
30. கொத்தமல்லி-50
31. புதினா -40
32. கறிவேப்பிலை -50
33. இஞ்சி-148
34. மொச்சை-60
35. எலுமிச்சை-200
36. நெல்லிக்காய் -70,80
37.ப.பட்டாணி-சின்ன பாக்கெட் 15
38. காளான்-50
39.வெள்ளரிக்காய்- 30
40. சக்கரவள்ளி -40
41. மரவள்ளி - 60
42. சுண்டைக்காய்-80
43. காப்சிகம் -50
44. கீரை வகைகள் 10,15,20
45. வாழைப்பழம் 30-80
46. பூண்டு -170

உழவர் சந்தையில் நேரடியாக விவசாயிகளே விற்பனை செய்வதால் மக்கள் அதிகளவில் தேடி வந்து வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பீன்ஸ் மற்றும் அவரைக்காய்தான் டாப் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.