பிரபல நடிகர் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! தந்தை மரணம், கார் விபத்தில் பலர் காயம்

6 months ago 7
ARTICLE AD

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியான நேரத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கார் விபத்து

இந்நிலையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்துடன் கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூரு சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகரின் ஒட்டுமொத்த குடும்பமும் காயமடைந்துள்ளனர்.

நிலைகுலைந்த நடிகரின் குடும்பம்

இன்று  காலை 7 மணிக்கு தருமபுரி அருகே நிகழ்ந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் ஒட்டுமொத்தமாக சேதமடைந்துள்ளது. இந்த கோர விபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை தந்தை சி.பி. சாக்கோ உயிரிழந்தார். காரில் பயணம் செய்த கார் டிரைவர், ஷைன் டாம், சாக்கோ மற்றும் அவரது தாய் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். நால்வரும் தருமபுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரை அவரது மேலாளர் ஓட்டி சென்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரின் தந்தை மரணத்திற்கு மலையாள திரை பிரபலங்கள் பலரும் போனில் அழைப்பு விடுத்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

Read Entire Article