<p>அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடியேறியதாக, ஏற்கனவே 104 பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மேலும் 119 பேரை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் , இன்று இரவு 10 மணியளவில் பஞ்சாப் மாநிலம் அமிர்சதசரசில் தரையிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏன் குஜராத்தில் தரையிறங்காமல், பஞ்சாப்பில் தரையிறங்க அனுமதிக்கபப்டுகிறது, எங்களை அவமானப்படுத்துகிறீர்களா என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p> </p>