பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி

1 week ago 3
ARTICLE AD

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கச் சென்றார். இந்த சந்திப்பின் போது விஜயின் தனிப்பட்ட மேனேஜரும் ரூட் என்கிற பிஆர் ஏஜன்சியை நடத்தி வரும் ஜகதீஷ் அவருடன் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முதலமைச்சரும் பிரதமரும் சந்தித்துக் கொள்ளும் போது சினிமா பிஆர் ஏஜண்ட் அங்கு எதற்காக சென்றார் என்கிற கேள்வியை தவெக ஆதரவாளர்கள் எழுப்பியுள்ளார்கள்.

தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றப்பின் விஜய் இன்று பிரமர் நரேந்திர மோதியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய் புதிதாக கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு நலன்கள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை விஜய் பிரதமரிடம் வழங்கினார் . மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை விஜய் இன்று சந்திக்க இருக்கிறார். தொடர்ந்து நாளை காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி ஆகியோரை விஜய் சந்திக்க இருக்கிறார்.

பத்திரிகையாளர்களை மீண்டும் தவிர்த்தார்

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியதில் இருந்து முதல்வராக பதவியேற்றது வரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இது அவர் மீது வைக்கப்படும் முதன்மையான விமர்சனங்களில் ஒன்று. அந்த வகையில் இன்று பிரதமரை சந்தித்தப்பின் தங்களது உரையாடலைப் பற்றி விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்து பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இன்றும் பத்திரிகையாளர்களை விஜய் தவிர்த்துவிட்டார்.

விஜயுடன் வந்த ரூட் ஜகதீஷ்

விஜயின் பிரதமர் சந்திப்பின் போது அவருடன் விஜயின் மேனேஜராக இருந்த ஜகதீஷ் உடன் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவரது மேனேஜராஜ ஜகதீஷ் இருந்து வந்தார். இது தவிர்த்து த ரூட் என்கிற செலிபிரிட்டி பி ஆர் ஏஜன்சி ஒன்றையும் ஜகதீஷ் நடத்தி வருகிறார். இந்த ஏஜன்சியில் இருந்து விலகும் நடிகைகளை குறிவைத்து தாக்கி அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கவிடாமல் செய்வதாக ஜகதீஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. தற்போது பிரதமர் மோதியுடனான சந்திப்பில் ரூட் ஜகதீஷ் என்ன செய்கிறார் என தவெக ஆதரவாளர்களே குழப்பமடைந்துள்ளார்கள். அரசியல் சந்திப்பின் போது பி ஆர் ஏஜண்ட் க்கு அங்கு என்ன வேலை என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

What exactly is Jagadish Palanisamy doing in Delhi along with CM Vijay for PM Modi meeting ?

Isn’t he just an actress PRO?

What constitutional or official government position does he even hold?
pic.twitter.com/70jmVAbxWH
— முத்து (@muthuhere3) May 27, 2026

முன்னதாக தனது தனிப்பட்ட ஜோதிடரான ரதன் பண்டித்திற்கு விஜய் அரசு பதவி வழங்கினார். இதற்கு சட்டசபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே விஜய் இந்த முடிவை திரும்பப் பெற்றார் .

Read Entire Article